தமிழக அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனசை முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் பல லட்சம் பேர் பயனடைவர்
அரசின் நிர்வாகம் சிறப்பாக அமைந்திடவும், அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்படுகிறது
இந்த போனஸ் மாத ஊதியம் அடிப்படையில் நிலையான ஊதியம் பெறும் ஊழியர்கள், முழுநேர, மற்றும் பகுதிநேர ஊழியர்கள், தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றுவோர், சிறப்பு கால முறை ஊதிய அடிப்படையில் ஊதியம் பெறும்
சத்துணவு ஊழியர்கள் , குறு அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள், உள்ளாட்சி மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலை., மானியக்குழு, அகில இந்திய தொழில் நுட்ப கலைக்குழு, அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக சம்பள விகிதம், அகில இந்திய பணி விதியின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர்கூறியுள்ளார்
No comments:
Post a Comment