http://aiadmkmkr.blogspot.com/

29 Sept 2011

காலத்தை வென்று நிற்கும் கழகம்


1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 1967 ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலுருந்து விலத்திக் காட்டி, திராவிட இயக்கத்தை தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் அறிஞர் அண்ணா. அவரின் மறைவுக்குப் பின்னர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தயவினால் முதலமைச்சர் கருணாநிதி சுயநல வெறியோடு, கட்சியையும், ஆட்சியையும் தன் குடும்பச் சொத்தாக்க முனைந்தார். அண்ணா, திராவிட இயக்கத்தை ஆரம்பித்த பொழுது அவருடன் இருந்த ஐம்பெரும் தலைவர்களான டாக்டர் நாவலர் போன்றவர்களை ஓரங்கட்டி ஆட்சி, அதிகாரத்தை, கட்சியை தன் குடும்பத்திற்கு மட்டுமே என்ற சர்வாதிகாரப் போக்கில் நடந்தார். அண்ணாவின் இலட்சியங்கள், கொள்கைகளை புறக்கனித்தார். இந்நிலையில் கழகத் தொண்டர்களின், பொதுமக்களின் உள்ளக் குமுறலை வெளியிட்டதற்காக தி.மு.கழக பொருளாளராகவும், பரங்கிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்த எம்.ஜி.ஆரை கருணாநிதி கட்சியிலிருந்து நீக்கினார். எம்.ஜி.ஆர். 1972 அக்டோபர் 17ல் புதிய இயக்கமாம் அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்தார். "அண்ணாவின்" திருவுருவத்தை கொடியில் பதித்தார். "அண்ணா" என்ற பெயரை கழகத்தின் பெயரில் இணைத்தார். அண்ணாயிசம் கழகத்தின் கொள்கையாக பிரகடனப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர்.-மலையாளி,நடிகர் நாடாள முடியுமா? அவரின் திரைப்படத்தைப் போல அவருடைய கட்சியும் 100 நாட்கள் ஓடும் என்று கிண்டலும் கேலியும் பேசிய கருணாநிதியின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் கழகத்தின் கிளைகள் அமைக்கப்பட்டு கருணாநிதி அரசின் அடக்குமுறையை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தன. சென்னை - திருவான்மியூரில் கழகத்தின் முதல் மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார். கழகம் தோன்றிய 6 வது மாதத்தில் 1973 மே 21ம் தேதி நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முதன்முதலாக "இரட்டை இலை" சின்னத்தை அறிமுகபடுத்த, இந்திய துணைக்கண்டமே வியக்கும் வண்ணம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றிவாகை சூடச் செய்தார்.

1974 ஜனவரி 25 சிதம்பரத்தில் முதன் முதலில் கழக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் மாநாட்டில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மாணவர்கள், இளைஞர்கள் அவர் பின்னே அணிவகுத்து வர வழி செய்தார். காலஞ்சென்ற சட்டப்பேரவைத் தலைவர் கா.காளிமுத்து தலைமையில் நடைபெற்ற அந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாள் மாநாட்டை கருணாநிதி அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிந்து வெற்றிகரமாக நடத்திய காரணத்தினாலும், முதலமைச்சர் கருணாநிதியின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து கருணாநிதி பிறந்த நாளில் அவரின் கொடும்பாவியை மாணவர் அணி சார்பில் கொளுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் எங்கள் சக மாணவத் திறன் பாலசுந்தரத்தை பட்டப்பகலில் கருணாநிதி கட்சிக்காரர்கள் வெட்டிச் சாய்த்தார்கள். வத்தலக்குண்டு ஆறுமுகம்,பூலாவரி சுகுமாரன், மதுரை கர்ணன் போன்ற எண்ணற்ற இளம் வீரர்களை இயக்கம் பலி கொடுத்தது.

கருணாநிதியின் ஆட்சியில் 1977ம் ஆண்டு வரை கண்களை, கரங்களை, கால்களை, இழந்தவர்கள், சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்கள், தாயை, தந்தையை, மனைவியை, குழந்தையை பிறந்த கழகக் குடும்பங்களின் எண்ணிக்கையை பட்டியல் இட்டால் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அத்தனை எதிர்ப்புகளையும் தாங்கி எம்.ஜி.ஆர். அந்த மகோன்னத தலைவரின் பின்னால் அணிவகுத்து கழகத்தை கட்டிக் காத்த வீரவரலாற்றுச் சரிதம் தான் அ.இ.அண்ணா தி.மு.கழகம். தமிழ்நாட்டில் கோயில், குளம் இல்லாத கிராமம் இருக்கும். ஆனால் அ.இ.அண்ணா தி.மு.க. அமைப்பு, அதன் கொடி பறக்காத கிராமம் இல்லை என்ற சிறப்புடன் இயங்கி 1977ம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி வாகை சூடி அண்ணாவின் ஆட்சி பீடத்திலிருந்த சுயநலப்புலி, கருணாநிதியை அகற்றிவிட்டு, அண்ணாவின் இதயக்கனியாம் எம்.ஜி.ஆரை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்த இயக்கம் அ.இ.அண்ணா தி.மு.கழகம்.

அ.இ.அண்ணா தி.மு.க.வின் பெயரில் உள்ள அனைத்திந்திய என்ற பெயருக்கேற்ப மத்திய அமைச்சரவையில் கழகத்தை சார்ந்த திருமதி. சத்யவாணிமுத்து, திரு.பாலாபழனூர் இருவரும் கேபினெட் அமைச்சர்களாகவும், டாக்டர் மு.தம்பித்துரை இந்திய நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் பொருப்பெற்றதொடு, நமது பக்கத்து மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு பொதுத்தேர்தல்களில் அ.இ.அண்ணா தி.மு.க. வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இப்படி அகில இந்திய அளவிலும் சிறப்பு பெற்ற இயக்கம் நம் இயக்கமாகும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும், ராஜ்யசபா எம்.பி.யாகவும், கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகவும் செல்வி.ஜெயலலிதா பொறுப்பேற்று கழக மற்றும் அரசுப் பணிகளில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உற்ற துணையாக திகழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக 1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் செல்வி.ஜெயலலிதா கழக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் வண்ணம் கருணாநிதியின் கனவை பொடிப்பொடியாக்கி தமிழகம் முழுவதும் சுறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் இல்லாத நேரத்திலும் மீண்டும் கழகம் அமோக வெற்றி பெற்று 3வது முறையாக எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பொறுப்பேற்கும் சிறப்பிற்கு அடித்தளமாக இரவு பகல் பாராது கண் துஞ்சாது உள்கட்சி - எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை துச்சமென மதித்து செயல்பட்டவர்.

கழகத்தின் வலிமையை உணர்த்தும் வண்ணம் எம்.ஜி.ஆர்., வேலூர், கடலூர், சேலம், கோவை மாநகர்களில் கழக மாநாட்டை நடத்தினார். 1986ம் ஆண்டு ஜூலை 12, ௧௩ நாட்களில் மதுரையில் கழகத்தின் அடிமட்டத் தொண்டனான கடலூர் முருகமணி தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் செல்வி.ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கிடவும், அன்றே எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசு ஜெயலலிதா தான் என்பதனையும் அந்த மாநாட்டின் மூலம் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்களுக்கும், லட்சோப லட்சம் மக்களுக்கும் அடையாளம் காட்டினார். அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர். பேசும் போது குறிப்பித்தார், கருணாநிதி ஒரு தீய சக்தி. அந்த தீய சக்தியை தமிழகத்து அரசியலிலிருந்து விரட்ட வேண்டும் என்றார். அந்த மகத்தான மக்கள் தலைவர் 1987ம் ஆண்டு டிசம்பர் 25, அமரராகின்ற வரை கருணாநிதியால் ஆட்சி பொறுப்பை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்க்குப் பின்னால் இரண்டான கழகத்தை ஒன்றாக்கி முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு, கழகத்தை ஒரே குடும்பமாக்கி கழகத்தை வழிநடத்தி 1991-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் செல்வி.ஜெயலலிதா தலைமையில் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது.

1972 முதல் 2010 இன்று வரை இடைப்பட்ட 38 ஆண்டுகளில் 1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமரராகின்ற வரை 11 ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். 1972 முதல் 1977 வரை ஏறத்தாழ 5 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். கருணாநிதியின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து போராட்ட அரசியல் செய்து பல கழகத் தொண்டர்களை பலி கொடுத்து ஆட்சியை அமைத்தார். எம்.ஜி.ஆருக்குப் பின் 1988 -1991 மூன்று ஆண்டுகளும், 1996 -2001 வரை 5 ஆண்டுகளும் ஏறத்தாழ 8 ஆண்டுகள் செல்வி ஜெயலலிதா கருணாநிதியின் அரசு மற்றும் அதிகாரத்தை எதிர்த்து கழகத்தை கட்டிக் காத்ததோடு மட்டுமல்லாமல், பல வழக்குகளை எதிர்கொண்டார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கழகம் அழிந்துவிடும். தான் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடலம் என்று கனவு கண்ட கருணாநிதி,ஜெயலலிதா கழகத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்துவடை பொறுக்காமல் அவரை ஒழித்தால்தான் தனக்கு அரசியல் வாழ்வு என்று தப்புக்கணக்கு போட்டு ஒரு சர்வாதிகாரியைப் போல முதலமைச்சர் என்ற அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி 1996ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதாவை கைது செய்து 28 நாட்கள் சிறையிலடைத்து மகிழ்ந்தார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியே வந்து கழகத்தை மேலும் வலிமையுள்ளதக்கி கருணாநிதியை அவர்தம் அடக்குமுறையை தவிடு பொடியாக்கினார். கழகத்திற்கு தாயானார். இந்திய துணைக்கண்டம் உற்றுநோக்கும் முதல்வர் ஆனார்.

1998ம் ஆண்டு ஜனவரி 1, 2 நாட்களில் நெல்லை சீமையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா மாநாட்டில் இந்திய அரசியலில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையாக கட்சி தலைவர்கள் (அத்வானி, டாக்டர் ராமதாஸ், வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள்) பங்கேற்ற மாநாட்டை நடத்தி மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் அமைத்து காட்டுவேன் என்று சூளுரைத்து 2001ல் கருணாநிதியை தமிழக அரசு கட்டிலிலிருந்து தூக்கி எறிந்தார்கள்.

ஆக, அ.இ.அண்ணா.தி.மு.க. 38 ஆண்டுகளில் 21 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் மக்களால் அமர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள், இல்லாதவர்கள், இயக்கமாக இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. பயங்கரவாதம், பிரவினைவாதம், தீவிரவாதம் தலைதூக்கா வண்ணம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி உள்ளார். வறட்சி மற்றும் சுனாமி போன்ற இயற்க்கை சீற்றத்திலும் துரித நிவாரணப் பணிகளால் தமிழக மக்கள் நிம்மதியாக சீரான வாழ்க்கை நடத்த முழுவீச்சில் அரசு எந்திரத்தை இயக்கி ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்துள்ள உழவர் பாதுகாப்புத் திட்டம் வேறு எவருடைய ஆட்சியிலும் செய்யப்படவில்லை என்பதோடு வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகளுக்கு செய்யவில்லை என்பது வரலாற்று உண்மை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி கழகத்தின் உள்கட்சித் தேர்தலை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடத்தி முடிக்கின்ற பெரிய கட்சி என்ற சிறப்பை ஜெயலலிதா நிலைநாட்டி உள்ளார். கழக குடும்பத்தில் ஒரு உறுப்பினர் அகால மரணமடைந்தாலும் கழகத்தின் சார்பில் குடும்ப நிதி வழங்கி பாதுகாப்பதோடு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகை வழங்கி கழகத்தினருக்கு தாயாக அவர் வழங்கி வருகின்றார்.

1972ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட நம் இயக்கம் 1973 மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் துணையோடு புதிய சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இந்தியாவை அன்று அசுர பலத்துடன் ஆண்டு கொண்டிருந்த இந்திராகாந்தி தலைமையிலான இ.காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் ஆக மூன்று பெருங்கட்சிகளை தவிடு பொடியாக்கி ஏறத்தாழ ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியதொடு, கருணாநிதி கட்சி வேட்பாளர் பொன் முத்துராமலிங்கத்தை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய இயக்கம் அ.இ.அண்ணா.தி.மு.கழகம். முதன் முதலில் கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் டாக்டர் அரங்கநாயகம் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இரட்டை இலை சட்டமன்ற உறுப்பினராக அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் சட்டசபையில் அமர்ந்தார்.

1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் முதல் 2005 காஞ்சிபுரம் - கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தேர்தல் வரை சராசரியாக ஒரு சட்டமன்றத்திற்கு 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிற இயக்கமாகவும், மக்கள் மனதில் ஒரு நிலைத்த உண்மையான இடத்தை தக்க வைத்துள்ள இயக்கமாகவும் அ.இ.அண்ணா.தி.மு.க. உள்ளது. இது தான் நமது இயக்கத்திற்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம். தமிழகத்தில் கடந்த 38 ஆண்டுகளாக மற்ற எல்லா கட்சிகளை விடவும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து 39% சதவிகித மக்களின் அசைக்க முடியாத ஆதரவுடன் முதன்மை இடத்தில் முன்னிலையில் உள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களை கட்டிக்காத்து திண்டுக்கல் தொடங்கி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி வரை 38 ஆண்டுகள் அ.இ.அண்ணா.தி.மு.க. பெற்று வரும் மகத்தான வெற்றியின் மூலம் எம்.ஜி.ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று செல்வி ஜெயலலிதா அவர்களால் பாதுகாக்கப்பட்டு அவரது தலைமையில் காலத்தை வென்று நின்று வெற்றி பெறுகிற கழகத்தின் பெருமைகளை காப்போம். வெற்றி வெற்றி வெற்றி எப்பொழுதும் நம் கழகத்திற்கு வெற்றி என்ற செய்தி திக்கெட்டும் பரவிட கண்துஞ்சாது பாடுபடுவோம்.

தகவல் உதவி:-
இதயக்கனி, வலைத்தளம்

இரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி?



இரட்டை இலைச் சின்னத்தை மக்கள்திலகம் அவர்கள் 1973ல் முதல் முதலாக அறிமுகம் செய்தது திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலுக்குத்தான். அதாவது இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவோமா வேண்டாமா என்ற ஒரு பெரிய மனப் போராட்டத்திற்குப் பிறகு, சரி வேட்பாளரை நிறுத்துவோம். இது நம் கட்சி ஜெயக்காவிட்டால் - நமக்கு பெரிய அவமானமாகிவிடும். நாம் கட்சி ஆரம்பித்து ஆறு மாதம் தான் ஆகிறது. இதில் நாம் கட்சி தோல்வியடைந்தால் கட்சியை கலைத்துவிட வேண்டியது தான் என்று கட்சியில் உள்ள செயலாளர்களிடம் சொன்னார்.  கட்சிக்கு தேர்தல் சின்னம் தேர்வு நடந்தது.


தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்த சின்னங்களின் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மக்கள்திலகம். ஏழை, எளிய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக அது இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதம் நடந்தது. அது சமயம் ஆளும் கட்சியான தி.மு.க.வின் தொல்லைகளுக்கு அளவே இல்லை. தி.மு.க. பிரச்சாரத்தில் இரட்டை இலை உதயசூரியனால் எரிந்து சாம்பலாக போய்விடும் என்றெல்லாம் பேசினார்கள். மகா பாரத யுத்தம் போல், தேர்தல் பிரச்சாரம் நடந்தது. யுத்த காலத்தில் போர்களத்தில் வலம் வந்த மாதிரி எம்.ஜி.ஆர். அன்று திண்டுக்கல்லை சுற்றி வந்தார். பகல்,இரவு பாராமல் ,மக்களைச் சந்தித்து, இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம் உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை மனதில் பதிந்து சாதனை படைத்து வருகிறது.


தகவல் உதவி:-
இதயக்கனி, வலைத்தளம்

இவர்தான் எம்.ஜி.ஆர்!!!???



27 Sept 2011

26 Sept 2011

தசைப்பயிற்ச்சி (PHYSIOTHERAPY EXERCISE) சிகிட்சை



ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை, நலத்திட்டம் எண்:30,
தசைப்பயிற்ச்சி (PHYSIOTHERAPY EXERCISE) சிகிட்சை, ஊனமுற்றோருக்கு, அனைத்து மாவட்ட மறுவாழ்வு மையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலரிடம் விண்ணப்பித்து பயன்பெற்று கொள்ளலாம்.

அம்மாவின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டம்!

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறியால் சுகத்தை அனுபவிக்கத் துவங்கியிருப்பதாக பெண்களும், கனவிலும் கிடைக்காத பொருள்- "லேப்டாப்' என்று மாணவர்களும், மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கின்றனர்.
பொதுமக்களின் மனநிலை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவது அரசின் கடமை. இந்த வகையில், கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட தேர்தலின் போது, தமிழக அரசியல் கட்சிகள் மக்கள் மனநிலையை அறிந்த வகையில், இலவச திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அளித்தன. இதன்படி, அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழை பயனாளிகளுக்கு நான்கு ஆடுகள் அல்லது மாடு ஆகியவை வழங்குவதாக அறிவித்திருந்தது.

தேர்தல் முடிந்து அ.தி.மு.க.,வே ஆட்சிப் பொறுப்பேற்றது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று, சட்டசபையில் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியையும் ஒதுக்கி, அவை வழங்கப்பட வேண்டிய கால இடைவெளியையும் அறிவித்தார். தொடர்ந்து,கடந்த 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூரில் நடந்த விழாவில், பயனாளிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கும் பணிகள் துவக்கப்பட்டன. இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றால் சுகத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம் என்றும் பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலவசங்களை பெற்ற, திருவள்ளூர் மாவட்டம் கன்னிம்மாபேட்டையைச் சேர்ந்த பயனாளிகள் கருத்து:

முனியம்மாள்: நான் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டேன். வாழ்க்கையில் சந்தோஷத்தை விட, கஷ்டம்தான் அதிகம். அரசு வழங்கியுள்ள இலவச, மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவற்றால் நான் சுகத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன். வெயில் காலங்களில் வெளியே படுப்பேன். அப்போது, ஏதாவது விஷப் பூச்சிகள் கடிக்கும். இனி மின்விசிறி இருப்பதால் வீட்டுக்குள்ளே படுத்து தூங்குவேன்; இனி பயமில்லை.

புஷ்பா: எங்கள் வீட்டில் ஏற்கனவே இருந்த மிக்சி பழுதடைந்த நிலையில், புதிதாக வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில், எனக்கு இந்த மிக்சி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் எனக்கு வேலைப்பளு குறைந்துள்ளது. தங்கத்தைப் போல இப்பொருட்களை நாங்கள் பாத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வோம்.

கன்னியம்மா: நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் சொற்பக் கூலித் தொகையில் மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வாங்க முடியாமல் இருந்தோம். அம்மியில்தான் அரைத்து வந்தோம். தற்போது இப்பொருட்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் வேலைப்பளுவும் குறைந்துள்ளது. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பொருள்- லேப்டாப் : லேப்டாப் பெற்ற திருவள்ளூர் அடுத்த காக்களூர் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்கள், எங்கள் வீட்டில் லேப்டாப் இருக்கிறது. லேப்-டாப்பை பெற்றிருப்பதன் மூலம் அடைந்துள்ள சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளனர்.

மாணவர் லஷ்மிகாந்தன்: லேப்-டாப்பில் அனைத்துப் பாடங்களும் சாஃப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தைப் படிப்பதை விட இதில் எளிதாக உள்ளது. இதில் உள்ள டிக்ஷ்னரி மிகவும் பயனுள்ளாதாக உள்ளது. என்னைப் போன்ற தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இக்கம்ப்யூட்டர் ஒரு வரப்பிரசாதம். மேல்படிப்புக்கு இது எனக்கு பேருதவியாக இருக்கும்.

மாணவர் மனோஜ்: இந்த லேப்-டாப் கிடைத்திருப்பதன் மூலம், வாழ்க்கையில் ஒருபடி நான் உயர்ந்துவிட்டதாக நினைக்கிறேன். இதில், உள்ள டிக்ஷ்னரியும், திருக்குறளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னைப் போன்ற ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ள இந்த லேப்-டாப் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. தமிழக முதல்வருக்கு நன்றி.

மாணவி சரண்யா: அனைத்துப் பாடங்களும் படிப்பதற்கு இந்த லேப்-டாப் மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.முன்பெல்லாம் விடுமுறை நாளில் உறவினர் வீட்டுக் சென்றால் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று படிப்பேன். இனி லேப்டாப்பை கொண்டு சென்றால் போதும். விரைவில், இண்டர்நெட் வசதியை ஏற்படுத்தி உலக விஷயங்கள் அனைத்தையும் நான் கற்றுக் கொள்வேன்.

மாணவி திபேகா: என் தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். குடிசை வீட்டில் வசிக்கிறோம். கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத, லேப்-டாப் கிடைத்திருப்பது என்னைவிட எனது பெற்றோருக்கு மகிழ்ச்சி. பொது அறிவை வளர்க்கவும், பாடங்களை படிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும், என்னுடைய எதிர்கால லட்சியமான சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தையும் லேப்டாப் நிறைவேற்றும்.

ஆடுகள் கொடுத்து எங்கள் வாழ்க்கையை வளர்த்தவர் ஜெ., :திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கம் கிராமத்தில், அரசு கொடுத்த ஆடுகளை, அதன் பயனாளிகள், மதிய உணவை கையில் வைத்துக் கொண்டு, வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தனர்.

இலவச ஆடுகளை முதல்வரின் கரங்களால் பெற்ற விதவைப் பெண் யசோதா,50, கூறும் போது, "கணவர் இறந்த பிறகு குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் தவித்த எனக்கு, முதல்வர் இலவச ஆடுகளைக் கொடுத்தது ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொருவருக்கும் ஒரு கிடா மற்றும் மூன்று பெண் ஆடுகளை அவர் வழங்கியுள்ளார். இந்த ஆடுகளை நன்கு வளர்த்து, ஆடுகளை அதிகரித்து என் குடும்பத்தை நான் காப்பாற்றுவேன்' என்றார்.

சுலோச்சனா,42: ஆடுகளை எங்கள் கிராமத்தில் உள்ள மற்ற ஆடுகளுடன் பழகும் விதமாக, அவர்களுடன் சேர்ந்து, காலியாக உள்ள விளைநிலங்களில் மேய்த்து வருகிறேன். என் குழந்தைகளைப் போல பாசத்துடன் இதை வளர்த்து வருகிறேன். இதற்குத் தேவையான தழைகள் கிராமத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன.

முடியலா,38: ஆடுகளை 5 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என, அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆடுகளை வைத்து எண்ணிக்கையை அதிகரிப்பேனே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் விற்க மாட்டேன். இந்த ஆடுகள் புதிய ரகமாக உள்ளதால், தனியாக மேய விடுவதில்லை. இதற்கு நோய் ஏற்படாமல் தடுக்க, கால்நடை மருத்துவர்கள் எங்கள் கிராமத்துக்கு அடிக்கடி வர, முதல்வர் ஆவன செய்ய வேண்டும். மேலும், இலவச ஆடுகளை பெற்ற விதவைப் பெண்கள் பிரேமா, துரையம்மாள், சுதா, கணவரால் கைவிடப்பட்ட பெண் பச்சையம்மாள் ஆகியோர், தங்களுக்கு இலவசமாக முதல்வர் வழங்கிய ஆடுகளை மேய்ப்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

தகவல் உதவி!
AIADMK INTERNET FORUM

ஏழைகள் வாழ்வில் விளக்கேற்றும் அம்மா!

மாணவர்களுகு இலவச லேப்டாப்....

25 Sept 2011

புற்றுநோய் உருவாக்கும் செல்போன் பேச்சு!

23 Sept 2011

தங்க தாரகை அம்மா

தங்க தாரகை அம்மா