இரட்டை இலைச் சின்னத்தை மக்கள்திலகம் அவர்கள் 1973ல் முதல் முதலாக அறிமுகம் செய்தது திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலுக்குத்தான். அதாவது இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவோமா வேண்டாமா என்ற ஒரு பெரிய மனப் போராட்டத்திற்குப் பிறகு, சரி வேட்பாளரை நிறுத்துவோம். இது நம் கட்சி ஜெயக்காவிட்டால் - நமக்கு பெரிய அவமானமாகிவிடும். நாம் கட்சி ஆரம்பித்து ஆறு மாதம் தான் ஆகிறது. இதில் நாம் கட்சி தோல்வியடைந்தால் கட்சியை கலைத்துவிட வேண்டியது தான் என்று கட்சியில் உள்ள செயலாளர்களிடம் சொன்னார். கட்சிக்கு தேர்தல் சின்னம் தேர்வு நடந்தது.
தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்த சின்னங்களின் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மக்கள்திலகம். ஏழை, எளிய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக அது இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதம் நடந்தது. அது சமயம் ஆளும் கட்சியான தி.மு.க.வின் தொல்லைகளுக்கு அளவே இல்லை. தி.மு.க. பிரச்சாரத்தில் இரட்டை இலை உதயசூரியனால் எரிந்து சாம்பலாக போய்விடும் என்றெல்லாம் பேசினார்கள். மகா பாரத யுத்தம் போல், தேர்தல் பிரச்சாரம் நடந்தது. யுத்த காலத்தில் போர்களத்தில் வலம் வந்த மாதிரி எம்.ஜி.ஆர். அன்று திண்டுக்கல்லை சுற்றி வந்தார். பகல்,இரவு பாராமல் ,மக்களைச் சந்தித்து, இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம் உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை மனதில் பதிந்து சாதனை படைத்து வருகிறது.

தகவல் உதவி:-
இதயக்கனி, வலைத்தளம்
No comments:
Post a Comment