இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறியால் சுகத்தை அனுபவிக்கத் துவங்கியிருப்பதாக பெண்களும், கனவிலும் கிடைக்காத பொருள்- "லேப்டாப்' என்று மாணவர்களும், மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கின்றனர்.
பொதுமக்களின் மனநிலை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவது அரசின் கடமை. இந்த வகையில், கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட தேர்தலின் போது, தமிழக அரசியல் கட்சிகள் மக்கள் மனநிலையை அறிந்த வகையில், இலவச திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அளித்தன. இதன்படி, அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழை பயனாளிகளுக்கு நான்கு ஆடுகள் அல்லது மாடு ஆகியவை வழங்குவதாக அறிவித்திருந்தது.
தேர்தல் முடிந்து அ.தி.மு.க.,வே ஆட்சிப் பொறுப்பேற்றது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று, சட்டசபையில் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியையும் ஒதுக்கி, அவை வழங்கப்பட வேண்டிய கால இடைவெளியையும் அறிவித்தார். தொடர்ந்து,கடந்த 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூரில் நடந்த விழாவில், பயனாளிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கும் பணிகள் துவக்கப்பட்டன. இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றால் சுகத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம் என்றும் பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலவசங்களை பெற்ற, திருவள்ளூர் மாவட்டம் கன்னிம்மாபேட்டையைச் சேர்ந்த பயனாளிகள் கருத்து:
முனியம்மாள்: நான் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டேன். வாழ்க்கையில் சந்தோஷத்தை விட, கஷ்டம்தான் அதிகம். அரசு வழங்கியுள்ள இலவச, மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவற்றால் நான் சுகத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன். வெயில் காலங்களில் வெளியே படுப்பேன். அப்போது, ஏதாவது விஷப் பூச்சிகள் கடிக்கும். இனி மின்விசிறி இருப்பதால் வீட்டுக்குள்ளே படுத்து தூங்குவேன்; இனி பயமில்லை.
புஷ்பா: எங்கள் வீட்டில் ஏற்கனவே இருந்த மிக்சி பழுதடைந்த நிலையில், புதிதாக வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில், எனக்கு இந்த மிக்சி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் எனக்கு வேலைப்பளு குறைந்துள்ளது. தங்கத்தைப் போல இப்பொருட்களை நாங்கள் பாத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வோம்.
கன்னியம்மா: நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் சொற்பக் கூலித் தொகையில் மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வாங்க முடியாமல் இருந்தோம். அம்மியில்தான் அரைத்து வந்தோம். தற்போது இப்பொருட்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் வேலைப்பளுவும் குறைந்துள்ளது. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பொருள்- லேப்டாப் : லேப்டாப் பெற்ற திருவள்ளூர் அடுத்த காக்களூர் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்கள், எங்கள் வீட்டில் லேப்டாப் இருக்கிறது. லேப்-டாப்பை பெற்றிருப்பதன் மூலம் அடைந்துள்ள சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளனர்.
மாணவர் லஷ்மிகாந்தன்: லேப்-டாப்பில் அனைத்துப் பாடங்களும் சாஃப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தைப் படிப்பதை விட இதில் எளிதாக உள்ளது. இதில் உள்ள டிக்ஷ்னரி மிகவும் பயனுள்ளாதாக உள்ளது. என்னைப் போன்ற தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இக்கம்ப்யூட்டர் ஒரு வரப்பிரசாதம். மேல்படிப்புக்கு இது எனக்கு பேருதவியாக இருக்கும்.
மாணவர் மனோஜ்: இந்த லேப்-டாப் கிடைத்திருப்பதன் மூலம், வாழ்க்கையில் ஒருபடி நான் உயர்ந்துவிட்டதாக நினைக்கிறேன். இதில், உள்ள டிக்ஷ்னரியும், திருக்குறளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னைப் போன்ற ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ள இந்த லேப்-டாப் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. தமிழக முதல்வருக்கு நன்றி.
மாணவி சரண்யா: அனைத்துப் பாடங்களும் படிப்பதற்கு இந்த லேப்-டாப் மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.முன்பெல்லாம் விடுமுறை நாளில் உறவினர் வீட்டுக் சென்றால் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று படிப்பேன். இனி லேப்டாப்பை கொண்டு சென்றால் போதும். விரைவில், இண்டர்நெட் வசதியை ஏற்படுத்தி உலக விஷயங்கள் அனைத்தையும் நான் கற்றுக் கொள்வேன்.
மாணவி திபேகா: என் தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். குடிசை வீட்டில் வசிக்கிறோம். கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத, லேப்-டாப் கிடைத்திருப்பது என்னைவிட எனது பெற்றோருக்கு மகிழ்ச்சி. பொது அறிவை வளர்க்கவும், பாடங்களை படிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும், என்னுடைய எதிர்கால லட்சியமான சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தையும் லேப்டாப் நிறைவேற்றும்.
ஆடுகள் கொடுத்து எங்கள் வாழ்க்கையை வளர்த்தவர் ஜெ., :திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கம் கிராமத்தில், அரசு கொடுத்த ஆடுகளை, அதன் பயனாளிகள், மதிய உணவை கையில் வைத்துக் கொண்டு, வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தனர்.
இலவச ஆடுகளை முதல்வரின் கரங்களால் பெற்ற விதவைப் பெண் யசோதா,50, கூறும் போது, "கணவர் இறந்த பிறகு குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் தவித்த எனக்கு, முதல்வர் இலவச ஆடுகளைக் கொடுத்தது ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொருவருக்கும் ஒரு கிடா மற்றும் மூன்று பெண் ஆடுகளை அவர் வழங்கியுள்ளார். இந்த ஆடுகளை நன்கு வளர்த்து, ஆடுகளை அதிகரித்து என் குடும்பத்தை நான் காப்பாற்றுவேன்' என்றார்.
சுலோச்சனா,42: ஆடுகளை எங்கள் கிராமத்தில் உள்ள மற்ற ஆடுகளுடன் பழகும் விதமாக, அவர்களுடன் சேர்ந்து, காலியாக உள்ள விளைநிலங்களில் மேய்த்து வருகிறேன். என் குழந்தைகளைப் போல பாசத்துடன் இதை வளர்த்து வருகிறேன். இதற்குத் தேவையான தழைகள் கிராமத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன.
முடியலா,38: ஆடுகளை 5 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என, அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆடுகளை வைத்து எண்ணிக்கையை அதிகரிப்பேனே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் விற்க மாட்டேன். இந்த ஆடுகள் புதிய ரகமாக உள்ளதால், தனியாக மேய விடுவதில்லை. இதற்கு நோய் ஏற்படாமல் தடுக்க, கால்நடை மருத்துவர்கள் எங்கள் கிராமத்துக்கு அடிக்கடி வர, முதல்வர் ஆவன செய்ய வேண்டும். மேலும், இலவச ஆடுகளை பெற்ற விதவைப் பெண்கள் பிரேமா, துரையம்மாள், சுதா, கணவரால் கைவிடப்பட்ட பெண் பச்சையம்மாள் ஆகியோர், தங்களுக்கு இலவசமாக முதல்வர் வழங்கிய ஆடுகளை மேய்ப்பதில், கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

தகவல் உதவி!
AIADMK INTERNET FORUM
No comments:
Post a Comment