கடந்த ஒரு வாரமாக நமது மொதுமக்களால் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம் பவர் கட், ஆம் இந்த பவர் கட் ஒன்று முதல் மூன்று மனி நேரம் இருந்த ஒரு கொடுமை இப்பொழது ஆறு மணி நேரத்தில் இருந்து எட்டு மனி நேரமாக போன உண்மை என்னவென்று தெரியுமா. அதன் விளக்கவுரை தான் இது.
1. தமிழ் நாட்டுக்கு சுமார் 11,000 மெகாவாட் மின்சாரத்தேவை என்பது ஒரு மறுக்கமுடியாத கருத்து. அதில் நமக்கு இப்பொது கிடைப்பது சுமார் 7500 மெகா வாட் தான்.
2. ஒரு பெரிய பிரச்சனையை மத்திய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் மறைக்க பார்க்கிறது. ஆம் ராமகுண்டம் அனல் மின்சார நிலையம் போன வாரம் மூடப்பட்டுள்ள்து. அதில் இருந்து நமக்கு கிடைத்த 659 மெகாவாட் மின்சாரம் இப்பொழுது பட்டை நாமம். இதற்க்கு காரனம் - தெலுங்கான பிரச்சினை மற்றும் சிங்காரேனி நிலக்கரி சுரங்க வேலை நிறுத்தம்.
3. அது எப்படி எலக்ஷன் டைம்ல கரென்ட் ஓரளவு பரவாயில்லை ஆனா இப்ப ரொம்ப மோசமா இருக்குன்னு கேட்பவர்களுக்கு, இது தான் உண்மை. எப்படியும் காங்கிரஸ் திமுக கூட்டனி ஜெயிக்க வேனும் என கங்கனம் கட்டி கொண்டு மத்திய அரசு தொகுப்பில் இருந்து 900 லட்சம் யுனிட்கள் வழங்கபட்டது. அதே சமயம் அவ்வளவு பெரிய ஆந்திராவுக்கு 490 லட்சம் யுனிட்கள் தான் தரப்பட்டது. அது இப்பொழுது இல்லை.
4. பரமாரிப்பு பணி என்ற ஒரு அல்வாவை தினமும் 10 இடத்தில் இருந்து இன்று பாதி சென்னைக்கே கொடுக்கிறார்கள். அவ்வளவு ஏரியாவை பரமாரிப்பு செய்ய வேண்டுமென்றால் சுமார் 45,000 ஆட்கள் தேவை படுவார்கள் அதனால் பரமாரிப்பு எனபது ஒரு பகல் வேடமே.
5. கூடங்குளம் உண்ணாவிரதம் இன்னும் ஒரு மறுக்க முடியாத காரனம். நாராயனசாமி இங்கு வந்து வழக்கமான் பதிலை தந்து விட்டு போனார், ஆம் பிரதமர் தான் இதற்க்கு முடிவு எடுக்க வேனும் என்று, ஆம் மத்திய அரசும் இப்பொழது தமிழ் நாட்டின் பவர் கட்டை கண்டு கொள்ளபோவதில்லை, தெலுங்கானா,கூடங்குளம் பிரச்சினையால் பவர் இல்லாமல் ஆந்திரா ம்ற்றும் தமிழகம் இருளில் உள்ளததை ரசிக்கிறார்கள்.
6. காற்றாலை மின்சாரம் பருவ மழை காரனமாக அடுத்த மூனு மாதத்திற்க்கு கிடைக்காது.
7. ஹைட்ரோ மின்சாரம் நிலையில்லா ஆற்று படுகைகளின் வெள்ளம் காரனமாக மிகவும் குறையும்.
8. தமிழ் நாட்டின் மாசு மற்றும் வருங்கால சந்ததிக்காக கூடங்குளத்தில் உண்ணாவிரதம் இருக்கும் நாம் நெய்வேலியில் பிளான்ட் 1 எக்ஸ்பேன்ஷனில் நமக்கு 46% சதவிகிதம் தான் தருகிறார்கள் அது மட்டுமல்ல பிளான்ட் 2லிருந்து 30% சதவிகிதம் தான் தருகிறார்கள்.
மத்திய அரசு இங்கிருந்து கிடைக்கும் அனு மின்சாரத்தை கூட சொற்ப சதவிகிதம் தான் நமக்கு தருகிறார்கள். இல்லாத ஒரு விஷயத்திற்க்கு உண்ணாவிரதம் இருக்கும் நாம் ஏன் நம் மன்னில் கிடைக்கும் மின்சாரத்திற்க்கு நாம் உரிமை கோரக்கூடாது. நாம் ஒன்றும் மற்ற மாநிலங்களுக்கு எதிரி இல்லை ஆந்திராவில் குறைந்த அளவே மின்சாரம் கிடைத்தாலும் பவர் கட் என்பது தமிழகத்தை கம்பேர் பன்னினால் மிக மிக குறைவே. குஜராத்தில் பவர் கட் என்பது விசேஷ நாட்கள் மாதிரி மிகவும் அரிதானது. கர்நாடகத்தில் சுமார் 5% சதவிகிதம் தான்.
நாளைய தமிழகம் எப்படி இருக்கும்னு நினக்கவே பயமாக இருக்கிறது ஏன் என்றால் நவீன தொழில்மயாக்களின் கொள்கைக்காக மின்சார தேவை மிக மிக அதிகம். கோவை சுஷ்லானுக்கு 80 மெகா வாட், செயின்ட் கோபின் இரண்டாவது தொழிற்ச்சாலைக்கு 140 மெகா வாட், அசோக் லைலேன்ட், போயிங் விமான தொழிற்ச்சாலை மற்றும் 23 பெரிய உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிற்ச்சாலைகளின் தேவை பன்மடங்கு.
எனக்கு தெரிந்தவரை மார்ச் 2012 மற்றும் அக்டோபர் 2012க்கு முதல் மின்சாரம் மத்திய பங்கீடு இல்லாமல் தமிழகத்திற்க்கு எக்ஸ்ட்ரா மின்சாரம் ஒரு கன்னீதீவு கதை மாதிரி தான்.
தகவல் உதவி:-
நாக் ரவி - முகநூல்
No comments:
Post a Comment