மதுக்கூர் பேருந்து நிலையத்தில் 01.11.2011 செவ்வாய்க்கிழமை அன்று
அஇஅதிமுக 40-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுக்கூர் ஒன்றிய செயலாளர் திரு.துரை.செந்தில் அவர்கள் தலைமை வகித்தார். மதுக்கூர் நகர செயலாளர் திரு.S. முகம்மது சரிபு வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு. T. மெய்க்கப்பன், திரு. A. முகைதீன் மரைக்காயர் மற்றும் R.தனபால் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி பேசினர். தலைமைக் கழக பேச்சாளர் திரு.திருப்பூர் இசார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற் தலைவர்கள், கழ்க முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய பாசறை கழக செயலாளர் திரு. எம்.பி. முருகானந்தம் அவர்கள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment