http://aiadmkmkr.blogspot.com/

18 Nov 2011

போதிய நிதி வழங்கிட மத்திய அரசு மறுப்பு : பஸ் கட்டணம் - பால் விலை உயர்வு ; ஜெ., சிறப்பு பேட்டி

 
 
சென்னை: தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெறும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார்.

இன்று காலையில் முதல்வர் ஜெ., தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் ஜெ., தொலைக்காட்சி மூலம் பேசினார். இந்த பேச்சில் அவர் கூறியதாவது:

மத்திய அரசு மாநில அரசுக்கு கேட்ட நிதியை வழங்க மறுத்து வருகிறது. போதிய நிதி இல்லாததால் சிரமப்பட்டு வரும் ஆக்ஸிஜன் வழங்கி மத்திய அரசு உதவி வேண்டும். ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மம்தா ஆளும் மேற்குவங்கத்திற்கு 2 ஆயிரத்து 614 வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் 2005 - 2006 ல் 4 ஆயிரத்து 915 கோடி கடனாக இருந்தது. ஆனால் கருணாநிதி ஆட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேலாக கடன் சுமை ஏற்பட்டது. இநத நிலை நீடித்தால் இன்னும் 53 ஆயிரம் கோடியை எட்டும் அளவிற்கு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.


கருணாநிதியின் அரசின் தவறான நடவடிக்கையால் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. எரிபொருள் விலை உயர்வு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவு காரணமாக மேலும் போக்குவரத்து துறையை சீரமைக்க முடியாமல் இருக்கிறது. போக்குவரத்து கழகம் 6 ஆயிரத்து 150 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. பல பஸ்கள் கோர்ட்டில் ஜப்தி செய்யப்பட்டு கிடக்கிறது. இதனை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் பஸ் கட்டணத்‌தை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மண்ணெண்ணெய், மின்சாரம் தராமல் மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அரசு அறிவித்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு நிதி வழங்கவும் மறுத்து வருகிறது. மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு பெரும் சுமையை தாங்க வேண்டியுள்ளது. என்று பேசினார். மின் துறையை ப‌ொறுத்த வரை தமிழக அரசு வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கிட 550 கோடி ஒதுக்கியது. இன்னும் நிதி ஒதுக்கும் நிலையில் தமிழகத்திற்கு சிரமம் ஏற்படும். மின்சாரம் கட்டணம் விரைந்து உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தெரிவித்து பின்னர் மக்களின் கருத்துப்படி விலை உயர்த்தப்படும். விவசாயிகள், நெசவாளருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதன் காரணமாக பஸ் கட்டணம் மற்றும் ஆவின் பால் விலையும் உயர்த்தப்படுகிறது என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.

1 comment: