http://aiadmkmkr.blogspot.com/

31 Dec 2011

முதலமைச்சர் அம்மா அவர்களின் புத்தாண்டு வாழ்த்து!

24 Dec 2011

இதய தெய்வத்துக்கு இதய அஞ்சலி . . .

3 Dec 2011

ரேசன் கடைகளில் புகார்பெட்டி - அமைச்சர் உத்தரவு


25 Nov 2011

மதுக்கூரில் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுக-வில் இணைந்தனர்



நன்றி! தினத்தந்தி - 24.11.2011

22 Nov 2011

ஆலத்தூரில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா!


நன்றி:- தினத்தந்தி - 22.11.2011

18 Nov 2011

போதிய நிதி வழங்கிட மத்திய அரசு மறுப்பு : பஸ் கட்டணம் - பால் விலை உயர்வு ; ஜெ., சிறப்பு பேட்டி

 
 
சென்னை: தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெறும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் பரபரப்பாக பேசினார். இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார்.

இன்று காலையில் முதல்வர் ஜெ., தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் ஜெ., தொலைக்காட்சி மூலம் பேசினார். இந்த பேச்சில் அவர் கூறியதாவது:

மத்திய அரசு மாநில அரசுக்கு கேட்ட நிதியை வழங்க மறுத்து வருகிறது. போதிய நிதி இல்லாததால் சிரமப்பட்டு வரும் ஆக்ஸிஜன் வழங்கி மத்திய அரசு உதவி வேண்டும். ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மம்தா ஆளும் மேற்குவங்கத்திற்கு 2 ஆயிரத்து 614 வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் 2005 - 2006 ல் 4 ஆயிரத்து 915 கோடி கடனாக இருந்தது. ஆனால் கருணாநிதி ஆட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேலாக கடன் சுமை ஏற்பட்டது. இநத நிலை நீடித்தால் இன்னும் 53 ஆயிரம் கோடியை எட்டும் அளவிற்கு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.


கருணாநிதியின் அரசின் தவறான நடவடிக்கையால் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. எரிபொருள் விலை உயர்வு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவு காரணமாக மேலும் போக்குவரத்து துறையை சீரமைக்க முடியாமல் இருக்கிறது. போக்குவரத்து கழகம் 6 ஆயிரத்து 150 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. பல பஸ்கள் கோர்ட்டில் ஜப்தி செய்யப்பட்டு கிடக்கிறது. இதனை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் பஸ் கட்டணத்‌தை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மண்ணெண்ணெய், மின்சாரம் தராமல் மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அரசு அறிவித்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு நிதி வழங்கவும் மறுத்து வருகிறது. மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு பெரும் சுமையை தாங்க வேண்டியுள்ளது. என்று பேசினார். மின் துறையை ப‌ொறுத்த வரை தமிழக அரசு வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கிட 550 கோடி ஒதுக்கியது. இன்னும் நிதி ஒதுக்கும் நிலையில் தமிழகத்திற்கு சிரமம் ஏற்படும். மின்சாரம் கட்டணம் விரைந்து உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தெரிவித்து பின்னர் மக்களின் கருத்துப்படி விலை உயர்த்தப்படும். விவசாயிகள், நெசவாளருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதன் காரணமாக பஸ் கட்டணம் மற்றும் ஆவின் பால் விலையும் உயர்த்தப்படுகிறது என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.

16 Nov 2011

மதுக்கூரில் குழந்தைகள் தினவிழா! ஒன்றிய செயலாளர் வாழ்த்துரை!

மதுக்கூர் செட்டித்தெரு பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 14.10.2011 திங்கள் அன்று நடைபெற்றது.  விழாவிற்க்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் துரை.செந்தில் அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் திரு.முகமது சரிபு, திரு.முகைதீன் மரைக்காயர், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், கிராம கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு சீறுடைகள், பரிசுகள் வழங்கபட்டது.,






13 Nov 2011

மதுக்கூரில் மாற்றுகட்சியினர் அதிமுக-வில் இணைந்தனர்...





நன்றி!
தினத்தந்தி - 13.11.2011

5 Nov 2011

மதுக்கூரில் அஇஅதிமுக 40-வது ஆண்டு தொடக்க விழா!


மதுக்கூர் பேருந்து நிலையத்தில் 01.11.2011 செவ்வாய்க்கிழமை அன்று
அஇஅதிமுக 40-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுக்கூர் ஒன்றிய செயலாளர் திரு.துரை.செந்தில் அவர்கள் தலைமை வகித்தார். மதுக்கூர் நகர செயலாளர் திரு.S. முகம்மது சரிபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு. T. மெய்க்கப்பன், திரு. A. முகைதீன் மரைக்காயர் மற்றும் R.தனபால் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி பேசினர். தலைமைக் கழக பேச்சாளர் திரு.திருப்பூர் இசார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற் தலைவர்கள், கழ்க முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய பாசறை கழக செயலாளர் திரு. எம்.பி. முருகானந்தம் அவர்கள் நன்றி கூறினார்.







3 Nov 2011

ஸ்டாக் இல்லீங்க சாரி...


ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.


மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு...
http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70

உள்ளாட்சி தேர்தல் தீபாவளி - 2011

1 Nov 2011

வாக்காளர் பட்டியல் - பெயர் சேர்க்க இன்னொரு வாய்ப்பு!



வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அடுத்தாண்டு  ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் இன்று துவங்குகிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குசாவடி அமைவிடங்களிலும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை இன்று முதல் வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.

பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க  8ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்க படிவம்  எண்  6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெற செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.

படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும்.

30 Oct 2011

புதிய வாக்காளர்களை சேர்க்க...


தங்கத்தாரகை அம்மா அவர்களின் தொலைபேசி எண்கள்!



27 Oct 2011

உள்ளாட்சி தேர்தல் ஒரு புள்ளி விவரம்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றி தோல்விகள் ஒரு புள்ளி விவர பார்வை.




மொத்த வாக்காளர்கள். 4 , 63,37,379.


வாக்குச் சாவடிகளின்மொத்த எண்ணிக்கை. 86,104.



நகரப் பகுதிகளில், 1,00,80,195 ஆண் வாக்காளர்களும், 99,13,703 பெண் வாக்காளர்களும், உள்ளனர் . மொத்தம், 1,99, 94,351வாக்காளர்கள் உள்ளனர்.




ஊராட்சிப் பகுதிகளில், 1,33, 18,643 ஆண் வாக்காளர்களும், 1,31,24,227 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.மொத்தம், 2,64,43,028 வாக்காளர்கள் உள்ளனர்.





மாநகராட்சிகள்.10

மாநகராட்சி உறுப்பினர்கள்.820,


நகராட்சி .125


நகராட்சி உறுப்பினர்கள்.3,697.


பேரூராட்சி.529.

பேரூராட்சி உறுப்பினர்கள்.8,303.



மாவட்ட ஊராட்சி .32.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்.655.



ஊராட்சி ஒன்றியம்.385.


ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்.6,470.



கிராம ஊராட்சி. 12,524,



கிராம ஊராட்சி உறுப்பினர்கள்.99,333.




மொத்த பதவிகள்.1,18,983.



போட்டியிட்ட சில முக்கிய கட்சிகள்.

1.அ.தி.மு.க,

2.தி.மு.க,

3.தே.மு.தி.க,

4.ம.தி.மு.க,

5.காங்கிரஸ்,

6.பா.ம.க,

7.வி.சி,

8.மார்கிஸ்ட் கம்னியுஸ்ட்,
என இன்னும் பல சிறு கட்சிகளும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிட்டனர்.



உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்.கட்சி அடிப்படையில்.


அ.தி.மு.க


மாநகராட்சிகள்.
10,உறுப்பினர்கள். 556

நகராட்சிகள்.89 உறுப்பினர்கள். 1680

பேரூராட்சிகள்.285,உறுப்பினர்கள்,2849.

மாவட்ட ஊராட்சி.566,



ஊராட்சி ஓன்றியம்.3727,




தி. மு. க.


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 121,

நகராட்சிகள்.23, உறுப்பினர்கள். 963,

பேரூராட்சிகள்.121,உறுப்பினர்கள்,1820.

மாவட்ட ஊராட்சி.26,



ஊராட்சி ஓன்றியம்.934,




தே.மு.தி.க.


மாநகராட்சிகள்.0,
8,உறுப்பினர்கள்.

நகராட்சிகள்.2, உறுப்பினர்கள்.120 ,

பேரூராட்சிகள்.3,உறுப்பினர்கள்,392.

மாவட்ட ஊராட்சி.5,

ஊராட்சி ஓன்றியம்.321,


ம.தி.மு.க


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 11,

நகராட்சிகள்.1, உறுப்பினர்கள்.49 ,

பேரூராட்சிகள்.7,உறுப்பினர்கள்,82.

மாவட்ட ஊராட்சி.4,

ஊராட்சி ஓன்றியம்.41,


காங்கிரஸ்,



மாநகராட்சிகள்.
0,உறுப்பினர்கள். 17,

நகராட்சிகள்.166, உறுப்பினர்கள். ,

பேரூராட்சிகள்.24,உறுப்பினர்கள்,379.

மாவட்ட ஊராட்சி.4,

ஊராட்சி ஓன்றியம்.147,



பா.ம.க



மாநகராட்சிகள்.
,உறுப்பினர்கள். 2,

நகராட்சிகள்., உறுப்பினர்கள். 60,

பேரூராட்சிகள்.2,உறுப்பினர்கள்,108.

மாவட்ட ஊராட்சி.3,

ஊராட்சி ஓன்றியம்.221,



பா.ஜ.க


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள்.4 ,

நகராட்சிகள்.2, உறுப்பினர்கள். 37,

பேரூராட்சிகள்.13,உறுப்பினர்கள்,181.

மாவட்ட ஊராட்சி.2,

ஊராட்சி ஓன்றியம்.31,



மார்கிஸ்ட் கம்,


மாநகராட்சிகள்.
0,உறுப்பினர்கள். 3,

நகராட்சிகள்.2, உறுப்பினர்கள்.20 ,

பேரூராட்சிகள்.5,உறுப்பினர்கள்,101.

மாவட்ட ஊராட்சி.2,

ஊராட்சி ஓன்றியம்.26,


இந்திய பொதுவுடமைக் கட்சி,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 4,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள். 10,

பேரூராட்சிகள்.2,உறுப்பினர்கள்,33.

மாவட்ட ஊராட்சி.4,

ஊராட்சி ஓன்றியம்.46,


விடுதலை சிறுத்தைகள்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 2,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள்.13 ,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,12.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.10,


பகுஜன் சமாஜ்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள்.2 ,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,2.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.1,


ராஷ்டிரிய ஜனதா தளம்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள். 1,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,8.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.2,


புதிய தமிழகம்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள். 0,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,7.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.7,


இதர கட்சிகள்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 0,

நகராட்சிகள்.0, உறுப்பினர்கள்.14 ,

பேரூராட்சிகள்.0,உறுப்பினர்கள்,29.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.4,



சுயேட்சை வேட்பாளர்கள்,


மாநகராட்சிகள்.0
,உறுப்பினர்கள். 52,

நகராட்சிகள்.5, உறுப்பினர்கள். 552,

பேரூராட்சிகள்.64,உறுப்பினர்கள்,1995.

மாவட்ட ஊராட்சி.0,

ஊராட்சி ஓன்றியம்.636,



மேலும் ஒரு சில இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை.



உள்ளாட்சி தேர்தலில் அதிக பட்சமாக அ.தி.மு.க.
39.02 சதவீத வாக்குகளும்,அடுத்தப்படியாக தி.மு.க வுக்கு 26.09 சதவீத வாக்குகளும்,தே.மு.தி.க வுக்கு 10.11 சதவீத வாக்குகளும், காங்கிரஸ்கு 5.71 சதவீத வாக்குகளும்,பா.ஜ.க வுக்கு 1.35 சதவீத வாக்குகளும், ம.தி.மு.க. வுக்கு 1.7 சதவீத வாக்குகளும்,பொதுவுடைமை கட்சிக்கு (மார்க்சியம்) 1.02, சதவீத வாக்குகளும், இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு 0.71 சதவீத வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்கள் 9.46 சதவீத வாக்குகளும், பா.ம.க.வுக்கு 3.55 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

17 Oct 2011

மாண்புமிகு அமைச்சர் மதுக்கூரில் தேர்தல் பிரச்சாரம் - 2

மாண்புமிகு அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் அவர்களும், திரைப்பட நடிகர் திரு.ராதாரவி அவர்களும் மதுக்கூர் பேருந்து நிலையத்தில், 16.10.2011 மாலை அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தனர்.







மாண்புமிகு அமைச்சர் மதுக்கூரில் தேர்தல் பிரச்சாரம் - 1

மாண்புமிகு அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் அவர்களும், திரைப்பட நடிகர் திரு.ராதாரவி அவர்களும் மதுக்கூர் பேருந்து நிலையத்தில், 16.10.2011 மாலை அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தனர்.







14 Oct 2011

மதுக்கூருக்கு அமைச்சர் வருகை!

மதுக்கூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க மாண்புமிகு அமைச்சர் ஆர். வைத்தியலிங்கம் அவர்கள் 16.10.2011 ஞாயிறு மாலை மதுக்கூர் வருகை தருகிறார்.  மதுக்கூர் பேருந்து நிலையம், முக்கூட்டுச்சாலை, சிவக்கொல்லை, காசாங்காடு ஆகிய பகுதிகளில் கழக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.



அடை மழையிலும் விடாத வாக்கு சேகரிப்பு!



மதுக்கூர் 9-வது வார்டு பகுதியில் அடை மழையிலும் விடாமல் வாக்கு சேகரிக்கும் திரு. மரைக்காயர் மற்றும் வார்டு வேட்பாளர்கள்..

12 Oct 2011

பெரியக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரம்...





ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் வாக்கு சேகரிப்பு - 2

மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர் திரு. துரை. செந்தில் அவர்கள் பெரியக்கோட்டை கிராமத்தில், 12.10.2011 அன்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர் திரு. மெய்க்கப்பன் அவர்களுக்கும், ஒன்றியகுழு உறுப்பினர் வேட்பாளர் திரு. முருகேசன் அவர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வேட்பாளர் திரு. புஷ்பநாதன் அவர்களுக்கும் வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.



ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் வாக்கு சேகரிப்பு - 1

மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர் திரு. துரை. செந்தில் அவர்கள் பெரியக்கோட்டை கிராமத்தில், 12.10.2011 அன்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர் திரு. மெய்க்கப்பன் அவர்களுக்கும், ஒன்றியகுழு உறுப்பினர் வேட்பாளர் திரு. முருகேசன் அவர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வேட்பாளர் திரு. புஷ்பநாதன் அவர்களுக்கும் வாக்கு சேகரித்தபோது எடுத்தப்படம்.






பெரியக்கோட்டை அதிமுக பிரச்சார வாகனம்

பெரியக்கோட்டை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் திரு. புஷ்பநாதன் அவர்களின் பிரச்சார வாகனம்.

11 Oct 2011

A.N.M. அலி அவர்கள் - வேட்பாளர்களுக்கு வரவேற்பு!

மதுக்கூர் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவர் திரு.A.N.M. அலி அவர்கள், தலைவர் வேட்பாளர் திரு. முகைதீன் மரைக்காயர் அவர்களுக்கும், மற்றும் வார்டு வேட்பாளர்களுக்கும் சர்ல்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்